தமிழ்நாடு மாவட்டங்கள்முகவரி :

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்
"சிவ இளங்கோ இல்லம் "
7,திருவல்லிகேணி
சென்னை-600 001
தமிழ்நாடு, இந்தியா

மின் அஞ்சல்:
tngou1924@yahoo.com

தொலைபேசி: 044 - 28441732

தமிழகம்

இயக்க வரலாறு

தேம்ஸ் நதிக்கரையில் இருந்து வணிக நோக்கோடு புறப்பட்ட கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் அடியெடுத்து வைக்கும்போதே என்.ஜி.ஒ. என்ற வர்க்கம் உருவாக்கப்பட்டு விட்டது. ஒரு நுற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் வரலாறு ( என்.ஜி.ஒ. யூனியன் ) உலகில் வேறு எந்த சங்கத்திற்கும் இல்லாத அளவிற்கு மதிப்பும், மரியாதையும் மிக்கது ஆகும். இந்த மாபெரும் இயக்கம் 1920 ஜனவரி 31 ம் தேதி தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் கடும் போராட்டத்திற்கு பிறகு சென்னை மாகாண பிரதம அமைச்சராக இருந்த பனகல் அரசர் தான் என்.ஜி.ஒ. யூனியனுக்கு அங்கீகாரத்தை வழங்கினார். அன்று தொடங்கி இன்று வரை என்.ஜி.ஒ. யூனியன் தனது அங்கீகாரத்தை பாதுகாத்து வருகிறது. (அரசு அங்கீகார எண். 625 , பொது , நாள் .3 .9 .1924 .)

தமிழகம்,கேரளம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட மாகாணமாக சென்னை ராஜதானி இயங்கியது. அப்போது சர்.பி.டி. தியாகராயர் அவர்கள்தான் இச்சங்கத்தை தோற்றுவிக்க உதவினார். இதன் முதல் முனைப்பு உதவினாளரே டாக்டர் .நடேசனார் அவர்கள் தான் அரசு அலுவலர்களின் புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் திறனாளராக இருந்தவர் திரு.டி.எம். நாயர், அரசு அலுவலர்களுக்கு முதல் ஊதியக்குழு பெற்றுத் தந்தார். டி.எம். நாயர் லண்டனுக்குச் சென்று ப்ரிவ்யூ கவுன்சிலில் வாதாடி அரசு ஊழியர்களுக்கான நியாயமிகு ஊதியக்குழுவை பெற்றுத் தந்தவர் நாயர் அவர்கள்.

நீதிக்கட்சிதான் முதன்முதலில் இந்த ஏற்பாட்டை நடைமுறைக்கு கொண்டு வந்தது. அந்த காலத்தில் எல்லாம் அரசு அலுவலர்களில் 2 வகை உண்டு. ஆங்கிலேயர் ஊழியர்களாக என்றால் ஷில்லாங்கில் சம்பளம், இந்தியர்கள் என்றால் ரூபாயில் சம்பளம். ஒரே வேலைக்கு இரு வேறு சம்பள விகிதங்கள். மேலும் உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற வேறுபாடுகள் அரசு அலுவலர்கள் மத்தியில் இருந்து வந்தது. பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய பலன்கள் கிடைக்காமல் போயின இவற்றையெல்லாம் தகர்த்தெறிய துவக்கப்பட்டது தான் என்.ஜி.ஒ. சங்கம்.

மேலும்

தலைவர்கள்

அமைப்பு


திரு. கே.வி.சக்ரவர்த்தி,M.A.,B.L.,
கோவை மாவட்ட தலைவர்
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்
கூட்டுறவு சார்பதிவாளர், துணைப்பதிவாளர் அலுவலகம்
கோவை - 641 045
கைபேசி:9443131837

The Kensington hotel
Powered by Best Free Counters