தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் திருமிகு.ககன்தீப்சிங் பேடி,I.A.S., அவர்களை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில மையத்தின் சார்பில் நேரில் சந்தித்து நிலுவை கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது. இச்சந்திப்பில் என்னுடன்,மாநில மேனாள் பொதுச்செயலாளர் திரு.தே.விக்டர்பால்ராஜ்,மாநிலச்செயலாளர் திரு.இரா.சமுத்திரம்,ஈரோடு மாவட்டத்தலைவர் திரு.அ.சக்திவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசின் மனித வள மேலாண்மைத்துறை முதன்மைச்செயலாளர் திருமிகு.கோ.பிரகாஷ்,I.A.S., அவர்களையும், பள்ளிக் கல்வித்துறை அரசின் முதன்மைச் செயலாளர் மரு.பி.சந்திரமோகன்,I.A.S., அவர்களையும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில மையத்தின் சார்பில் சந்தித்து பல்வேறு கோரிக்கையில் குறித்து பேசப்பட்டது.