அரசின் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களுடன் சந்திப்பு.

நூற்றாண்டு பாரம்பரிய மிக்க தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத்தலைவராக போட்டியின்றி இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமிகு.த.அமிர்தகுமார் அவர்கள் அரசின் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திருமிகு.மா.சுப்பிரமணியம் அவர்களுடன் சந்திப்பு.

மீண்டும் மாநிலத்தலைவராக தேர்வுபெற்றமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள். துறையிலுள்ள நிலுவை கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது.

இச்சந்திப்பில் மாநிலத்தலைவர் அவர்களுடன்,மாநில துணைத்தலைவர்கள் திரு.ஆர்.சி.எஸ்.குமார், திரு.அ.வெங்கடேசன், மாநிலப்பொருளாளர் திருமதி.வே.திரவியத்தம்மாள்,மாநில தலைமை நிலையச்செயலாளர் திரு.மா.அதிகமான்முத்து, மாநிலச்செயலாளர் திரு.இரா.அருள்ராஜ், மாவட்டத்தலைவர்கள் வட சென்னை திரு.து.தேவராஜ், தென் சென்னை திரு.வா.பன்னீர்செல்வம், மேற்கு சென்னை திரு.எம்.நித்தியானந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.