அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுடன் சந்திப்பு.

நூற்றாண்டு பாரம்பரியமிக்க தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத்தலைவராக போட்டியின்றி இரண்டாவது முறையாக தேர்வுப்பெற்ற திருமிகு த.அமிர்தகுமார் அவர்கள் தமிழ்நாடு அரசின் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திருமிகு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். இச்சந்திப்பில் நிலுவை கோரிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது.

இச்சந்திப்பில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத்தலைவருடன்,மாநில துணைத்தலைவர் திரு.ஆர்.சி.எஸ்.குமார், மாநிலப்பொருளாளர் திருமதி.வே.திரவியத்தம்மாள், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வித்துறை நிர்வாக பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் திரு.ஜெ.அப்துல்வகாப், தமிழ்நாடு அரசு எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு.இராஜேந்திரன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.