அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களுடன் சந்திப்பு

நூற்றாண்டு பாரம்பரியமிக்க தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத்தலைவராக போட்டியின்றி இரண்டாவது முறையாக தேர்வுப்பெற்ற திருமிகு.த.அமிர்தகுமார் அவர்கள் தமிழ்நாடு அரசின் மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திருமிகு.கே.என்.நேரு அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

இச்சந்திப்பில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத்தலைவருடன்,மாநில துணைத்தலைவர் திரு.நா.செந்தில், மாநிலப்பொருளாளர் திருமதி. வே.திரவியத்தம்மாள், மாநில தலைமை நிலையச்செயலாளர் திரு.மா.அதிகமான் முத்து மற்றும் மாநிலச்செயலாளர் திரு.இரா.அருள்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்