தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் இணைப்புச்சங்கங்களில் ஒன்றான தமிழ்நாடு ஆஷா பணியாளர்கள் ஒன்றியத்தின் செங்கல்பட்டு மாவட்ட பொதுக்குழு கூட்டம் சென்னை,தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைமை அலுவலக கட்டடமான சிவ.இளங்கோ இல்லத்தில் நடைபெற்றது. இப்பொதுக்குழு கூட்டத்திற்கு இச்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி.இராதிகா தலைமை தாங்கினார். திருமதி.நித்யா அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத்தலைவர் திருமிகு.த.அமிர்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புப்பேருரை நிகழ்த்தினார்கள். இப்பொதுக்குழு கூட்டத்தில் ஒன்றியத்தின் மாநில துணைத்தலைவர் திருமதி.வே.திரவியத்தம்மாள், மாநில இலக்கிய அணிச்செயலாளர் திரு.வெங்கடாசலம், செங்கல்பட்டு மாவட்டத்தின் செயலாளர் திருமதி.கவிதா, செங்கல்பட்டு மாவட்டத்தின் பொருளாளர் திரு.மணிமொழிச்செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார மையங்களிலும் ஆஷா பணியாளர்களை நியமனச் செய்திட வேண்டும்,குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.20,000/- வழங்கிட வேண்டும்,ஆஷா பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்,கல்வி தகுதி உள்ளவர்களுக்கு கிராம சுகாதார செவிலியர் பயிற்சி வழங்க வேண்டும்,காலியாக உள்ள துணை சுகாதார மையங்களையும் சேர்த்து பணி செய்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புப்படி வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்பு மாவட்ட நிருவாகிகள் தேர்தல் நடைபெற்றது.இதில் திருமதி.நித்யா மாவட்டத்தலைவராக தேர்வு பெற்றார்.மாவட்ட துணைத் தலைவர்கள், செயலாளர்,பொருளாளர்,அமைப்புச்செயலாளர்,பிரச்சாரச்செயலாளர்,இணைச் செயலாளர்கள் ஆகிய பதவிகளுக்கு நிருவாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக மாவட்டச்செயலாளர் திருமதி.கு.வள்ளி அனைவருக்கும் நன்றி கூறினார்.