நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் மே தினத்தை முன்னிட்டு மாநிலத்தலைவர் திருமிகு.த.அமிர்தகுமார் கொடியேற்றி வைத்து மே தின வாழ்த்துகளை தெரிவித்தார் இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில மேனாள் தலைவர் தானைத்தலைவர் சிவ.இளங்கோ அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில துணைத்தலைவர் திரு.ஆர்.சி.எஸ்.குமார்,மாநிலச்செயலாளர் திரு.எ.ஜெயபாலன்,மாநில இளைஞரணி செயலாளர் திரு.அ.வெங்கடேசன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.