தமிழ்நாடு மாவட்டங்கள்முகவரி :

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்
"சிவ இளங்கோ இல்லம் "
7,திருவல்லிகேணி
சென்னை-600 001
தமிழ்நாடு, இந்தியா

மின் அஞ்சல்:
tngou1924@yahoo.com

தொலைபேசி: 044 - 28441732

தமிழகம்

இயக்க வரலாறு பகுதி :2

     அதன் பின்னர் எம்.ஆர்.இராஜாராம் நாயுடு, சி. இராஜகோபாலாச்சாரி, பி.போலிரெட்டி, ஆர். பட்டபிராமையா, கிருஷ்ணமாச்சாரி, கே.கண்ணன்குட்டிமேனன், கே.ஜெகதீச ஐயர், எம்.ஜே. அருளையா, டி. தங்கவேல் ஆச்சாரி, ஆர். கோவிந்தசாமி, எஸ்.எஸ். ஆழ்வாரப்பன், என்.அரங்க இராமானுஜம், டி.வரதராவ், வி.தேவநாதன் என இந்த விருட்சத்திற்கு நீர் ஊற்றி பேணிக்காத்த பேரியக்கவாதிகள். இதில் திரு.கே. கண்ணன்குட்டிமேனன் அவர்கள்தான் இந்த இயக்கத்தின் வரலாற்றினை மாதம் தோறும் தாங்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பொது ஊழியன் என்ற இதழினை காலாண்டு இதழாக ஆரம்பித்து , பின்னர் அது மாத இதழாக வெளிவந்தது. எஸ்.எஸ். ஆழ்வாரப்பன் அவர்கள்தான் இந்த இயக்கத்தினை நாடெங்கும் நடை பயணமாகவே சென்று அனைவரும் இந்த இயக்கத்தில் இணைந்து செயலாற்றும் வகையில் வளர்த்து அஞ்சா நெஞ்சன் ஆழ்வாரப்பன் என அன்பொழுக அழைக்கப்பெற்றவர்.

1938ல் இராஜாஜி சென்னையின் முதலமைச்சராக இருக்கும் பொழுது அவரால் கொண்டு வரப்பட்ட ஊதிய குறைப்பு திட்டத்தை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் என்.ஜி.ஒ. யூனியன் பல போராட்டங்களை 1947 , 1949 , 1952 , 1966 , 1968 என்றவாறு பல ஆண்டுகள் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. 1978 ம் ஆண்டு தானைத் தலைவர் சிவ. இளங்கோ தலைமையில் நடந்த போராட்டங்கள் தான் நிகழ்யுக தலைமுறையினருக்கு பரிட்சயமானவை ஆகும்.

பல்வேறு போராட்டங்களை வென்ற என்.ஜி.ஒ. யூனியன் 1982 ம் ஆண்டு அன்றைய மாநில முதல்வர் அவர்களால் கேட்டுக் கொண்டதற்கிணங்க உறுப்பினர்கள் வாக்காளர்களாக இருந்து ஓட்டு பெற்று மாநிலத் தலைவராக வேண்டும் என்ற முறை கொண்டு வரப்பட்டது. அப்போது தலைவராக செயல்பட்டுக் கொண்டிருந்த தானைத் தலைவர் சிவ.இளங்கோ அவர்கள் தலைமையில் மாநிலத் தலைவருக்கான தேர்தலை சந்தித்து 78 சதவீத வாக்குகள் பெற்று தலைவரானார். அதன் பின்னர்தான் அரசு அலுவலர் வெகுஜன இயக்கமாக மாறியது. வெற்றிபெற்று 1984 ம் ஆண்டு என்.ஜி.ஒ. சங்கத்தின் மாநாடு வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்டது.

பக்கம்    1     2     3

தலைவர்கள்

அமைப்பு


திரு. கே.வி.சக்ரவர்த்தி,M.A.,B.L.,
கோவை மாவட்ட தலைவர்
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்
கூட்டுறவு சார்பதிவாளர், துணைப்பதிவாளர் அலுவலகம்
கோவை - 641 045
கைபேசி:9443131837