தமிழ் நாடு வரைப்படம்
an image
முகவரி :

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்
"சிவ இளங்கோ இல்லம் "
7,திருவல்லிகேணி
சென்னை-600 001
தமிழ்நாடு, இந்தியா
மின் அஞ்சல் : tngou1924@yahoo.com

தொலைபேசி :044 - 28441732

1. ரகசிய குறிப்பேட்டு முறை ஒழிக்கப்பட்டது.
2. பணியில் இருக்கும் போது மரணமுற்ற அனைத்து அரசு அலுவலர் குடும்பத்திற்கு ரூ. 1,50,000 பெற வழிவகை கண்டது.
3. 18 மாத அரைச் சம்பள மருத்துவ விடுப்பை முழுச் சம்பளமாக வாங்கித் தந்தது.
4. சரண் விடுப்பு பெற்றுத் தந்தது.
5.அரசு குடியிருப்புகளுக்கு குறைந்த வாடகை நிர்ணயித்து தந்தது.
6.பணிக்காலத்தில் மரணமுற்ற அரசு அலுவலர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தந்தது.
7. பல துறைகளில் சீரான பதவி உயர்வு வாய்ப்பு பெற ஒரு யூனிட் முறையை ஏற்படுத்தியது.
8. துறைவாரி ஆலோசனைக்குழுக்கள் அரசு மட்டத்தில் பெற்றுத் தந்தது. துறைவாரியான பிரச்சனைகளை எளிதில் தீர்க்க உதவியது.
9. ஓய்வுபெறும் அலுவலருக்கு அவர் சிறப்பு சேமநலநிதித் திட்டத்தில் செலுத்திய தொகை வட்டியுடன் கூடுதலாக ரூ.10,000/- அரசிடமிருந்து பெற்றுத் தந்தது.
10. அரசு அலுவலர் இறந்துவிட்டால் அவர் பெற்ற வீடுகட்டும் முன்பணம் வட்டியுடன் தள்ளுபடி செய்ய ஆணை பெற்றுத் தந்தது.
11. தட்டச்சர்களுக்கு நிபந்தனையற்ற தேர்வு நிலைப்பதவிகள் கல்வித்தகுதி/ஆண்டு ஊதிய உயர்வு விதிகள் தளர்வு பெற்றுத் தந்தது.
12. ஐந்தாவது ஊதியக் குழுவால் மறுக்கப்பட்ட தேர்வுநிலை சிறப்பு நிலையை பெற்றுத் தந்தது.
13. மத்திய அரசு அகவிலைப்படிக்கேற்ப அதே நாளில் மாநில அரசு அலுவலர்களுக்கும் அகவிலைப்படி பெற்றுத் தந்தது.
14. மாதந்தோறும் மருத்துவப்படி ரூ.50/- பெற்றுத் தந்தது.
15. மத்திய அரசுக்கு இணையான ஊதியவிகிதம் பெற்றுத் தந்தது.
16. அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவர்தம் நிலையினருக்கும் 5% தனி ஊதியம் பெற்றுத் தந்தது.
17. அமைச்சுப் பணியாளர்களுக்கு 15,500 மேம்படுத்தப்பட்ட பதவி உயர்வு பணியிடங்கள் பெற்றுத் தந்தது.
18. பதிவுரு எழுத்தர்கள் பேருக்கு பதவி உயர்வு ஆணை பெற்றுத் தந்தது.
19. அரசு அலுவலர்களுக்கு போனஸ் பெற்றுத் தந்தது.
20. வேலை நிறுத்தம் செய்த நாட்களுக்கும் ஊதியம் பெற்றுத் தந்தது.