தமிழ் நாடு வரைப்படம்
an image
முகவரி :

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்
"சிவ இளங்கோ இல்லம் "
7,திருவல்லிகேணி
சென்னை-600 001
தமிழ்நாடு, இந்தியா
மின் அஞ்சல் : tngou1924@yahoo.com

தொலைபேசி :044 - 28441732


43.50% அகவிலைப்படியை, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்றோருக்கு 1.1.2006 முதல் ஊதியத்துடன் இணைந்து அகவிலை ஊதியம் ஆக பெற்றது.
44.2001 முதல் இருந்த வேலை நியமன தடைச்சட்டத்தை நீக்கம் செய்து ஆணை பெற்றது.
45.சரண் விடுப்பு 15 நாட்களாக மீண்டும் பெற்றது.
46.குடும்ப பாதுகாப்பு நிதியை 1 லட்சத்திலிருந்து 1.5 லட்சமாக உயர்த்திப் பெற்றது.
47.கருணை அடிப்படை பணி நியமனத்திற்கு இருந்த தடையை நீக்கி ஆணை பெற்றது.
48.மாநகராட்சி, நகராட்சி தொகுப்பூதிய தினக்கூலி பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்து ஆணை பெற்றது.
49.அரசின் பல்வேறு துறைகளில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து 1.1.2006 அன்று 10 ஆண்டு பணிமுடித்த அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்து ஆணை பெற்றது.
50.வருங்கால வைப்பு நிதி முன்பணம் 60% லிருந்து 75% ஆக உயர்த்தி பெற்றது.
51.கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஜமாபந்திப் படியை ரூ.1200/- லிருந்து ரூ.1700/- ஆக உயர்த்திப் பெற்றது
52.கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றும் தங்களது அலுவலகங்களை சிறப்புடன் பராமரித்திட வேண்டி ஆண்டு ஒன்றுக்கு பராமரிப்புச் செலவாக ரூ.800/- பெற்றது.
53.கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்படும் நிலையான பயணப்படியை மாதம் ரூ.100/-லிருந்து ரூ.200/-ஆக உயர்த்தி ஆணை பெற்றது.
54.கிராம உதவியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் அனுமதித்து ஆணை பெற்றது.
55.அலுவலக உதவியாளர் நிர்ணயம் செய்வதில் இருந்த நிபந்தனையை தளர்த்தி 12 :1 என்ற விகிதத்தில் நியமனம் செய்ய ஆணை பெற்றது.
56.ஊர்தி ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் சலவைப்படியை மாதத்திற்க்கு ரூ.30/-லிருந்து ரூ.60/- ஆக உயர்த்தி ஆணை பெற்றது.
57.அரசு அலுவலகங்களில் பெண் பணியாளர்களுக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்திக் கொடுக்க ஆணை பெற்றது.
58.ரூபாய் 5500/-க்கு மேல் ஊதியம் பெறும் குரூப் 'B' சான்றிதழ்களில் அத்தாட்சி செய்து கையொப்பமிட அதிகாரம் பெற்றுக் கொடுத்தது. (அரசாணை எம்.எஸ்.எண். 189 P&AR(S) Dept. dt. 18.7.2007).
59.வருமான வரி சம்மந்தமாக விதிவிலக்கு பெற்றுக் கொடுத்தது. (அரசுக்கடிதம் எண் .7969/நிதி (B.G.II) துறை நாள்.16.2.2008)
60.தட்டச்சர் / சுருக்கெழுத்தர்களுக்கு முன் ஊதிய உயர்வு பிடித்தம் செய்ததை நிருத்துவதற்கான அரசாணை பெற்றுக் கொடுத்தது. (அரசுக்கடிதம் எண் . 7358/அ.வி - 4/2005-13, நாள். 21.1.2008 )
61.இலங்கைவாழ் தமிழ் மக்களின் துயர் துடைக்க அரசு அலுவர்களிடம் ஒருநாள் ஊதியத்தை அரசாணை மூலம் பிடித்தம் செய்து வழங்க ஆணை பெற்றுக் கொடுத்தது. (அரசாணை எம்.எஸ்.எண். 477, நிதி (CMPRF) துறை நாள். 5.11.2008)
62.உயர்நீதிமன்ற வழக்கு எண். WP 4600/2006ன் படி தட்டச்சர் கிரேடு -1ல் உள்ளவர்களுக்கு 5% தனி ஊதிய பாதிப்பிற்க்கு நிவாரணம் பெற்றுக் கொடுத்தது.
63.சுருக்கெழுத்தர் கிரேடு -1 & II ல் உள்ளவர்களுக்கு நேரடியாக கண்காணிப்பாளர் பதவி உயர்வு (அரசாணை எம்.எஸ்.எண். 121, P&AR, (Per.B) துறை நாள். 18.5.2007) பெற்றுக் கொடுத்தது.
தமிழகம்