தமிழ் நாடு வரைப்படம்
an image
முகவரி :

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்
"சிவ இளங்கோ இல்லம் "
7,திருவல்லிகேணி
சென்னை-600 001
தமிழ்நாடு, இந்தியா
மின் அஞ்சல் : tngou1924@yahoo.co.in

தொலைபேசி :044 - 28441732

1.மாநில கூட்டுமன்ற கூட்டம் நடைபெற அரசு ஆணை (அரசு க.எண்.37171/கே-99-8/P&A.R./17.8.2000) பெற்றது.
2.அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 615 பதலிப் பணியாளர்களை நிரந்தரம் செய்து அரசு ஆணை (அரசானை எண்.300/ மக்கள் நல்வாழ்வு குடும்பநலம்/21.8.2000) பெற்றது.
3.அமைச்சுப் பணியாளர் பதவி மேம்படுத்துதல் - அரசாணை எண்.595/89 அமுல்படுத்தாமல் உள்ள துறைகளில் விரைந்து அமுல்படுத்த அரசு ஆணை (அரசுக் கடிதம் எண்.64175/நிதி/2000-1/28.8.2000)பெற்றது.
4.பணி மாறுதலுக்குப் பின் தொடர்ந்து அரசு குடியிருப்பில் இருக்க அரசாணை (அரசாணை எண்.375/ வீட்டுவசதி மற்றும் நகர்புறம்/6.9.2000)பெற்றது.
5.அங்கன்வாடி, ஊட்டச்சத்து குழந்தைகள் நல அமைப்பாளர்கள், பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் பயிற்சிக்கு வயது வரம்பு தளர்வு செய்து அரசாணை (அரசாணை எண்.321/மக்கள் நல்வாழ்வு குடும்பநலம் /7.9.2000)பெற்றது.
6. தட்டச்சர் உடன் இளநிலை உதவியாளர் பதவிகளை தனித்தனியாக இளநிலை உதவியாளர் தட்டச்சர் என பிரித்து ஆணை. (அரசாணை எண்.174/பணியாளர் மற்றும் நி.சீ.துறை /8.9.2000) பெற்றது.
7. அரசு குடியிருப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளிலிருந்து வாடகைப் பணம் பிடிக்காமல் குடியேறிய நாளிலிருந்து பிடித்தம் செய்திட அரசாணை (அரசாணை எண்.377/வீட்டுவசதி மற்றும் நகர்புறம்/11.9.2000)பெற்றது.
8.நெல்லை மாநகராட்சிக்கு நகர ஈட்டுப்படி வழங்கிட அரசாணை (அரசாணை எண்.420/ நிதித்துறை நாள் . 11.9.2000)பெற்றது.
9.சிறப்பு சேமநலநிதி - அரசு ஈடுகட்டும் தொகை ரூ.5000லிருந்து ரூ.10000 ஆக உயர்த்தி உத்தரவு (அரசாணை எண்.429 / நிதித்துறை - ஓய்வு / 15.9.2000) பெற்றது.
10.கூட்டுறவுத் தணிக்கைத்துறையில் தணிக்கை அலுவலர் முதுநிலை தணிக்கை அலுவலர் பதவிகளை மேம்படுத்தி தணிக்கை உதவி இயக்குநர், கூட்டுறவு தணிக்கை அலுவலர் பதவிகளாக உயர்த்திட அரசாணை (அரசாணை எண்.436/நிதித்துறை/20.9.2000) பெற்றது.

பகுதி -2

தமிழகம்